Return to site

Maharam August Matha Rasi Palan 2021

· Monthly Horoscope

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் வரவேற்கத்தக்கதாக இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் கவலை கொள்ளும் அளவில் இல்லை.  கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். பணி நிரந்தரம் குறித்த கவலை வந்து போகும்.  தொழில் செய்பவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண அரும் பாடு பட வேண்டியிருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்த வரை ஏற்ற நிலை இருக்கும் வருமானம் கூடும். சேமிப்பு அவசியம். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள்  சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். தமிழில் ஜாதகம் (Horoscope In Tamil) பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

broken image

காதல் / குடும்பம்

கணவன் மனைவி  உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்ப உறவுகள் சீராக இருப்பது உங்கள் கையில் தான் உள்ளது. அனுசரித்து விட்டுக் கொடுத்து நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்க இயலும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். மற்றவர்களையும் புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயலுங்கள். 

காதலில் வெற்றி பெற சுக்கிரன் பூஜை

நிதிநிலை

பொருளாதார நிலையில் ஏற்றம் தரும் மாதமாக இந்த மாதம் அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பூர்வீகச் சொத்துக்கள்  உங்கள் கைகளில் வந்து சேரும். 

நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரசி லக்ஷ்மி பூஜை

உத்தியோகம்

அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்களுக்கு அளிக்கப்படும் கூடுதல் பொறுப்புக்களை சிறப்பாகக் கையாண்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் நாடி வரும். 

பணி செய்யும் இடத்தில் சிறந்து விளங்க செவ்வாய் பூஜை

சுயதொழில்

தொழிலை மேம்படுத்த நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பண உதவி கைக்கு வந்து சேரும். வங்கிக் கடன் சுலபமாகக் கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவாக்க இந்த மாதம் ஏற்ற தருணமாக இருக்கும். புதியதொழில் நுட்பங்கள் மூலம் உங்கள் தொழிலை மேம்படுத்துவீர்கள். போட்டியாளர்களிடம் கவனம் தேவை.

தொழில்  வல்லுநர்கள்

புதிய வாய்ப்புகள் உங்களை நாடி வரும். அதனை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் வெற்றி காண இயலும். நீங்கள் வெளி நாட்டுத் தொடர்பின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவது குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு தொழில் முன்னேறும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். 

பணி செய்யும் இடத்தில் சிறந்து விளங்க செவ்வாய் பூஜை

ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மேலும் நீங்கள் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தை சீராக தக்க வைத்துக் கொள்வீர்கள். தியானம் மற்றும் யோகா பயிற்சி மூலம் உங்கள் தேக ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும். 

உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை

கல்வி

பள்ளி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்களின் கவனத்தை சிதற விடும் வாய்ப்புள்ளதால் மனதை ஓருமுகப்ப்டுத்தி படிக்க வேண்டும். பெற்றோர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உங்களுக்கு வழிகாட்டிகளாக  இருப்பார்கள். வெளி நாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 16, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 19, 20, 21, 26, 27